பாடசாலை கீதம்
எம்மை ஆளும் ஏக அல்லாஹ்
துணை வேண்டி நின்றோம் பணிவாய்
உயர் கல்வி தந்து எம்மை
சீராக்கி வைப்பாய் அல்லாஹ்
இனபேதமின்றி பயிலும்
இளையோரே நாமும் என்றும்
குறையாத அறிவைத் தருவாய்
குணவாளன் நீயே அல்லாஹ் (எம்மை ஆளும்)
ரபுக்கந்தனையில் இயங்கும்
அல் ஹுதாவின் பாலர் நாங்கள்
சீரான கல்வி பயின்று
சிறப்போடு வாழ வைப்பாய் (எம்மை ஆளும்)
நல்லொழுக்கம் கொண்டு வாழ
சன்மார்க்க வழியைத் தருவாய்
நலமாக வாழ என்றும்
நிலமீது அருளைச் சொறிவாய் (எம்மை ஆளும்)
ஆசான்கள் நலமாய் வாழ
துணையோனை இறைஞ்சி நின்றோம்
உயர் கல்வி பெற்று நாமும்
உயர்வாக்கி வைப்பாய் அல்லாஹ் (எம்மை ஆளும்)





