அல் ஹுதா பாடசாலையின் வரலாறு
வளம் செழிக்கும் வட மேல் மாகாணத்தில் குருணாகல் மாவட்டத்தில் தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதியில் இப்பாகமுவ கல்வி வலயத்தில் எழில் கொஞ்சும் கிராமமான ரம்புகந்தனையில் கல்விக் களஞ்சியமான அல் ஹுதா முஸ்லிம் மகா வித்தியாலயம் கம்பிரமாய் காட்சி தருகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க ரிதீகம நகரத்திட்கு நெருக்கமான குருணாகல் கெப்பிடிகள பாதையின்அருகில் அமைந்திருப்பது இப்பாடசாலையின் கேத்திர சிறப்பம்சமாக கூறலாம். பாடசாலையினது வரலாற்றுப் பக்கங்களை மீட்டிப்பார்க்கும் போது இப்பாடசாலையின் தோற்றமானது ஆரம்பத்தில் ரம்புக்கந்தனையின் அமைந்துள்ள ரிதீ விஹாரை சிங்கள மாலை நேர வகுப்பாக 1969.01.29ம் திகதி உதயமானது என்பது வரலாற்றின் பதிவாகும். அப்போதிருந்த கிராமத்தின் தலைமைகளின் நற்சிந்தனையினால் மாணவர்களின் கல்வித் தாகத்தை தனிப்பதற்காகபாடசாலையின் உருவாக்கம் தொடர்பாக ஈடுபாடு காட்டினர். விளைவாக ரிதீ விஹாரை பாடசாலையின் ஒரு பிரிவாக ஆரம்பிக்கப்பட்டது . அவ்வேளை ஆசிரியர்களாக ஏ .சி .செய்யத் அஹமத் ,எஸ் .ஏ கரீம் ,வை ஹம்மாத் ,மர்ஹூம் ராசிக் ஆகியோர் கடமையாற்றியதுடன் ,மாணவர்களின் தொகை 108 ஆகவும் காணப்பட்டது .இக்கலையகத்தின் முதல் அதிபர் எனும் மகுடத்தை 1969ம் ஆண்டு ஜனாப் ஏ .சி.செய்யத் அஹமத் சூடிக் கொண்டார் .
இவரைத் தொடர்ந்து ஜனாப் எம் .சீ . எம்.ரவ்ப் பச்சா பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்றார்.இவரது தொடரான முயற்சியினாலும் ,பெற்றோர் ,பழைய மாணவர்கள் ஆகியோரின் அயராத முயற்சியினாலும்1970.06.01 ம் திகதி கல்வி காரியாலய அங்கீகாரத்துடன் ,பாடசாலை ரிதீ விஹாரை சிங்களப் பாடசாலையிலிருந்து பிரத்தியோகப் பகுதியான ரம்புக்கந்தன பள்ளிவாசல் மத்ரஸாவிற்கு மாற்றம் பெற்றது. இது பாடசாலை வரலாற்றில் முக்கியமாக நினைவு படுத்தப்பட வேண்டிய விடயமாகும்.
இக்காலத்தில் பாடசாலையில் ஏற்படுத்தப்பட்ட திருப்பங்களில் மர்ஹூம்களான எம்.மஹ்மூத் ,என்.எம்.அஹ்மத் லெப்பை ,அப்துல் அஸீஸ் ஆகியோருக்கு சொந்தமான காணி பாடசாலையின் தனியான உருவாக்கத்திற்காக வேண்டி அன்பளிப்பு செய்யப்பட்டமையை குறிப்பிடலாம். சாதகதுல் ஜாரியாவாக வழங்கப்பட்ட மேற்படி காணியில் அரச மற்றும் தனியார் உதவியின் மூலம் 60*20 கட்டிடம் அமைக்கப்பட்டு பள்ளியில் இருந்து தற்போது பாடசாலை அமைந்துள்ள காணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.இம்மாற்றம் மாணவர்களின் கல்வியில் புத்துணர்ச்சியொன்றினை ஏற்றப்படுத்தக் காரணமாக அமைந்தது.
ஜனாப் ரவ்ப் பாச்சா அதிபருக்கு பின் 1971.09.01ம் திகதி ஜனாப் எஸ்.எம்.சம்சுதீன் இப்பாடசாலையின் அதிபர் பதவியினை அலங்கரித்தார்.எஸ்.எம்.சம்சுதீன் அதிபரின் முயற்சியினால் தற்காலிகமாக 1971.09.01ம் திகதி இப்பாடசாலையில் ஆறாம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது.தொடர்ந்து 1975.02.01ம் திகதி மர்ஹூம் ஏ.என்.அன்வர் பதவியேற்றினார். அப்போது ஆசிரியர் தகை 08 ஆகவும் மாணவர் தொகை 105 ஆகவும் காணப்பட்டது.
.1975.02.20ம் திகதி ஏ.எஸ்.எம்.கபீர் இப்பாடசாலையின் அதிபர் பொறுப்பினை தனதாக்கிக் கொண்டார்.அப்போது வளங்களுக்கு ஏற்ப பாடசாலையின் வளர்ச்சிக்காக உழைத்தார்.
இவரது நிர்வாக காலத்துக்குப் பின் 1976.01.05ம் திகதி ஜனாபா எஸ்.எம்.மர்லியா முஹம்மத் இப்படசையின் அதிபர் பொறுப்பேற்றார்.இவர்களின் காலப்பகுதியில் பாடசாலையின் முன்னேற்றத்திற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.பாடசாலையின் தற்காலிக கட்டிடத்தை திருத்தும் வேலைக்காக ஏல விற்பனை மூலம் நிதி சேகரிக்கப்பட்டது.இதன் மூலம் பாடசாலையின் இடப்பிரச்சினை ஓரளவிற்கு தவிர்ந்தது,தவிரவும் இக்காலத்தில் மாணவர்களின் கல்வி அடைவுகளுக்காக பிரத்தியேக திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களை நெறிப்படுத்தினார்.
இவரின் பணிகள் பாடசாலையிலிருந்து ஓய்வு பெற்றதும்,ஜனாப் ஜ.ஹாஜிதீன் 1977.03.01ம் திகதி ரம்புக்கந்தன முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றினார்.குறுகிய காலமாக இருந்த இவரது நிர்வாகத்துக்கு பின் 1978.01.18ம் திகதி அதிபராக தலைமைத்துவத்தினை ஏற்றார்.அப்போது ஆசிரியர் தொகை 07 ஆகவும் மாணவர் தகை 146 ஆகவும் காணப்பட்டது.இவர் சுமார் 10 வருடங்கள் இப்பாடசாலையின் அதிபராக பணியாற்றி நிர்வாக ஒழுங்குகளில் பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும்,மாறுதல்களையும் மேற்கொண்டார்.நிரந்தரமாக அரச அங்கீகாரத்துடன் 06ம் வகுப்பு முதல் 08ம் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டமை.இவருடைய காலத்தில் ஏற்பட்ட மித முக்கியமான திருப்பமாகும்.இதை தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டது.
1979.01.29ம் திகதி ரம்புக்கந்த முஸ்லிம் வித்தியாலயம் என்ற பெயர் மறைந்து அல் ஹுதா என்ற பெயர் சூட்டப்பட்டது அதே வேளை ஏ.எஸ்.ஆதிக்க பீ வீ பழைய மாணவராக இருந்து ஆசிரியரக பதவியேற்றார்.இவருடைய காலத்தில் ஆசிரியர் 09 ஆகவும் மாணவர் தொகை 220 ஆஹாவுமாகவும் காணப்பட்டது.இவரது காலத்திலேயே இரு மாடிக்கட்டிடமான அப்துல் அஸீஸ் மண்டபம் அமைக்கப்பட்டு புதிய மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டன.
இவரைத்தொடர்ந்து ஜனாப் ஏ.எஸ் மௌஜூத் 2002.04.11ம் திகதி பாடசாலை அதிபர் என்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.இவரது காலத்தை அல் ஹுதாவின் பொற்காலம் என்றும் கூறலாம்.இவரது காலத்தில் 08 ஆசிரியர்களும் 232 மாணவர்களும் காணப்பட்டனர்.இவரது காலப்பகுதியில் கல்வித்துறையிலும்,வெளிக்காவு அடைவுகளிலும் தேசிய மட்டம் வரை அல் ஹுதாவின் நாமத்தை ஓங்கச்செய்தமை முக்கிய சிறப்பம்சமாகும். இக்காலத்தில் "செழுமை"என்ற நடப்பு விவகாரங்கள் அடங்கிய சஞ்சிகை வெளியிடப்பட்டது.மாணவர்களின் ஆக்கங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டவை சஞ்சிகை வெளியிட்டு விழா முக்கிய பிரமுகர்களின் உரை களுடன் இடம் பெற்றது.இதன் மூலம் கிடைக்கப்பட்ட நிதியில் பாடசாலையின் தற்போது உள்ள வாசிகசாலையின் ஆரம்ப அத்திவாரம் அமைக்கப்பட்டமை.சாதனையாக அறிமுகப்படுத்தலாம்.இவ்வசிகசாலையின் முடிவான நிர்மாணம் மர்ஹுமா பத்ருன் நிசா அவர்களின் நினைவாக 2008ம் ஆண்டு பத்ருன் வாசியாகசாலை என்ற பெயரில் திறந்து வைக்கப்பட்டது.
இது தவிரவும் பாடசாலை மைதானத்திட்டற்காக வேண்டி காணியை பெற்றுக்கொள்வதில் பெற்றோர்களின் பங்களிப்பே அதிகம் காணப்பட்டமை பெருமைக்குரிய விடயமாகும்.மற்றும் மனையியல் கூடம், சல்மா மண்டபம்,கணினிக்கூடம்,என்பனவும் நிர்மாணிக்கப்பட்டமை இவரது காலத்தில் குறிப்பிடத்தக்க விடயமாகும்.2007ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலை சாதனை படைத்தது.31 மாணவர்கள் பரீட்சைக்கு தோன்றி 19 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று 89.8% பெற்றுக்கொண்டமை பாரியதொரு வெற்றியாகும்.
அவ்வாறே கா.போ.தா.சாதாரணதர பரீட்சையிலும் அல் ஹுதா மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றமை சிறப்புக்குரியதாகும்.2007ம் வருடம் 92% மாணவர்கள் சித்தி பெற்று வலய மட்ட 243 பாடசாலைகளில் எமது பாடசாலை இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது 2008,2009,2010,2011ம் வருடங்களில் வலய மட்ட பாசாலைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் முதலிடத்தை அல் ஹுதா பெற்றுக்கொண்டமையும் மிக மிக முக்கியமான விடயமாகும்.2009.10.07ம் திகதி கா.போ.தா.உயர் தரம் ஆரம்பிக்கப்பட்டு அல் ஹுதமுஸ்லிம் வித்தியாலயம் மகா வித்தியாலயமாக தரம் உயர்வு பெற்றமையும் ,2011ம் ஆண்டு மூன்று மாணவர்கள் உயர் தரப்பரீட்சைக்கு தோற்றி 100% சித்தி பெற்றமையும் அல் ஹுதாவுக்கு மட்டுமல்லாது ரம்புக்கந்தன கிராமத்திற்கும் ஒரு சரித்திரம் படைத்த விடயமாகும்.2010ம் ஆண்டு பாடசாலை ஊடக மையத்தினது முயற்சியினால் அல் ஹுதா எப்.எம் என்ற அலை வரிசையாக ஒலிபரப்பப்பட்டு மாணவர்களின் நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.
சகல போட்டிகளிலும் பாடசாலை மாணவர்கள் அகில இலங்கை வரையில் முன்னேறிச் சென்று சாதனை படைத்திருக்கின்றனர்.இப்பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் பேராதனை,ஒலிவில் பல்கலைக்கழகங்கள்,கல்வியற் கல்லூரி,ஜாமியா நளீமியா இஸ்லாஹிய்யா,ஆயிஷா ஸித்தீக்கா போன்ற கலைக்கக்கூடங்களில் உயர் கல்வியை பெற்று வருவது பாடசாலை அடைவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.





